உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி. கிருமியை அழிக்கும் மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், எலியில் இருந்து எச்.ஐ.வி. கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழகம் சாதனை புரிந்து உள்ளது.